மழைக்கு முன் பருத்தி அறுவடையை முடிக்க விவசாயிகள் தீவிரம்

மழைக்கு முன் பருத்தி அறுவடையை முடிக்க விவசாயிகள் தீவிரம்
X
பருத்திக்குண்டான விலைக்கு அதிகரித்து கொள்முதல் செய்ய அரசுக்கு கோரிக்கை
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர், அருள்மொழிதேவன், இடையாத்தங்குடி, கணபதிபுரம், ஏர்வாடி, திருமருகல், பண்டாரவாடை, போலகம், நரிமணம், வாழ்குடி, விற்குடி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில், விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்த பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து பூ பூத்து, காய் காய்த்து குலுங்கியது, நல்ல மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், சில பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன், கோடை மழை விட்டு விட்டு 'பெய்ததால் பூக்கள் உதிர்ந்து, காய்கள் பழுத்து கொட்டியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். பருத்தி செடிகளுக்கு அடி உரங்களை இட்டு பயிரை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால், பருத்தி பஞ்சு மகசூல் தரும் நிலைக்கு வந்தது. இதனால் விவசாயிகள், பருத்தி செடியில் இருந்து பஞ்சை எடுக்கும் பணியில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து பருத்தி விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது, வெப்பமான சூழல் நிலவுவதால், மழைக்கு முன்பு, பஞ்சை பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். எனவே, தமிழக அரசு பருத்தியின் விலையை அதிகரித்து கொள்முதல் செய்ய வேண்டும் என, பருத்தி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story