அரவக்குறிச்சி-கனகபுரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.

அரவக்குறிச்சி-கனகபுரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா.
அரவக்குறிச்சி-கனகபுரி அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா , கொடையூர் ஊராட்சியில் உள்ள கனகபுரி என்கிற ஓடை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இன்று அதிகாலை மங்கல இசை உடன் துவங்கிய கும்பாபிஷேக விழாவில் விநாயகர் வழிபாடு , புண்யாகம் , நாடி சந்தானம் ,உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று தீபாதாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாம் காலையாக பூஜை நிறைவு பெற்றது. தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதனை தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாரணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொடையூர் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.
Next Story