இட்லி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை

இட்லி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
X
மதுரை பரவை அருகே கடன் தொல்லையால் இட்லி கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் பரவை ஊர்மெச்சி குளம் பகுதியில் வசிக்கும் வேலுவின் மகன் பிரகாஷ் (34) என்பவர் சமயநல்லூரில் இட்லி கடை நடத்தி வந்தார். இவர் பலரிடம் கடன் பெற்ற நிலையில் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இட்லி கடை வியாபாரமும் சரிவர நடக்காததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் (ஜூன்.25) நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story