போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த காவல் ஆணையர்
மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி “ANTI DRUG CLUB” இணைந்து, சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவ, மாணவிகள் “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” ஏற்று “போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை” நேற்று (ஜூன்.26)கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியானது மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரியில் துவங்கி பசுமலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story





