கிருஷ்ணகிரியில் குப்பையில் கிடந்த விண்ணப்பங்கள்.

X
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவல வளாகத்தில் 13 அரசு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலக வளாகத்தில் அம்பேத்கா் உருவச் சிலை அருகே உள்ள குப்பையில் பிரதமா் மந்திரி வீடு கட்டும் திட்ட விண்ணப்பங்கள், ஆதார், வாக்காளா் அட்டைகள், பயனாளிகளின் வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல்கள் கிடந்தன. பொதுமக்கள், குப்பையில் கிடந்த ஆவணங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனா். குப்பையில் யார் ஆவணங்களைக் போட்டது என்று மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story

