லஞ்சம் வாங்கிய கலெக்டர் கைது

X
திருவேற்காடு நகராட்சியில் வீட்டு வரி கட்ட ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது திருவள்ளுரை சேர்ந்தவர் ஜெகதீஷ் இவர் திருவேற்காடு, நடேசன் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கி உள்ளார் இந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றவும் மற்றும் வீட்டு வரி செலுத்துவதற்காக திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். இந்த வீட்டிற்கு வீட்டு வரி செலுத்துவதற்கு ரூ.25 ஆயிரம் லம்சமாக தர வேண்டுமென நகராட்சியில் பணிபுரியும் பில் கலெக்டர் உமாநாத் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ் பணம் கொடுக்க மணம் இல்லாமல் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெகதீஷிடம் கொடுத்து அனுப்பிய நிலையில் அதனை நகராட்சி அலுவலகத்தில் இருந்த பில் கலெக்டர் உமாநாத் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களகமாக உமாநாத்தை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து லஞ்சமாக பெற்ற பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவேற்காடு நகராட்சியில் வீட்டு வரி செலுத்த ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையால் அங்கிருந்த மற்ற ஊழியர்களும், அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்து போனது குறிப்பிடத்தக்கது.
Next Story

