நாட்டு வெடி குண்டு வழக்கில் குற்றவாளிகாளை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்

திருவள்ளூர் அருகே முன் விரோத பகையால் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே முன் விரோத பகையால் நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது, இந்த வழக்கில் சிறுவர்கள் இருவர் உட்பட்ட ஐந்து பேரை போலீசார் தனிப்படை அமைத்து வலை வீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ் தீபன், ஜாவித் ஆகிய 3 பேரும் இரவு நின்று பேசிக் கொண்டிருந்தனர், அப்போது திடீரென அங்கு இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு அவர்கள் மீது வீசியதில் முகேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்தார். மேலும் இந்த கும்பல் தீபன் ஜாவித் இருவரையும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். தீபன் என்பவர் கையில் வெடிகுண்டு பட்டதில் கை தோல்பட்டையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது ஜாவித் தலையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது, உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனை வரும் வழியில் முகேஷ் என்பவர் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று கை தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட தீபன் என்பவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசியது யார் என்றும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். உயிரிழந்த முகேஷ் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்ததாகவும், ஜீவாவும் ஆகாசும் நண்பர்களாக இருந்து கஞ்சா புகைப்பது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் ஜீவா அண்ணன் முகேஷ் அதை கண்டித்து ஆகாஷ் உடன் சேரவிடாமல் ஜீவாவை தன்னுடன் சிலிண்டர் போடும் பணிக்கு அழைத்துச் சென்று உள்ளார், இதனால் ஆகாஷ்க்கும் முகேஷுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது,கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆகாஷ் என்ற இளைஞரின் காதை முகேஷ், ஜீவா, ரகுமதுல்லா வெட்டிய சம்பவத்திற்கு பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வெடிகுண்டு வீசி படுகொலை செய்து தலைமறைவாக உள்ள ஆகாஷ் -19 சஞ்சய் என்ற டில்லி பாஸ்கர்-19 வசந்தகுமார் -23 சிறுவர்கள் ரியாஸ் -17 ஆகாஷ்-17 ஆகிய ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர், நாட்டு வெடிகுண்டு வந்தது எப்படி யார் சப்ளை செய்கிறார்கள் என்பது கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், திருவள்ளூர் அருகே முன் விரோத பகையால் நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
Next Story