போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

சர்வதேச போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப், கொடி அசைத்து தொடங்கி வைத்து பின்னர் உறுதிமொழி ஏற்றார்.
சர்வதேச போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப், கொடி அசைத்து தொடங்கி வைத்து பின்னர் உறுதிமொழி ஏற்றார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவைகள் இணைந்து சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப். தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். மேலும் இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் 1000 மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு போதை பொருட்கள் எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்களை முழக்கமிட்டு பேரணியில் சென்றார்கள். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், மாணவ மாணவியர்கள் தன்னார்வமற்றும் அலுவலர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் போதைப் பொருளுக்கு எதிராக கல்லூரி மாணவ மாணவியர்கள் மைமிங் பாடல்களுடன் நடைபெற்ற நாடகத்தினை பார்வையிட்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வீடியோவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வெளியிட்டார்கள். தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக ரங்கோலி கோலம் வரையப்பட்டவர்க்கும். மௌன மொழி (மைமிங்) நாடகத்தில் பங்குபெற்றவர்களுக்கும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்கள். இந்நிகழ்வில் உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் நிஷாந்தினி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நலக்குழு தலைவர் பவானி, திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினிகாந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story