மேலூரில் சட்டப் பணியில் ஆணைக் குழுவின் கூட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பட்டூர் நவ இந்தியா சைனிஷ் பள்ளியில் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக கூட்டம் நேற்று (ஜூன்.26) நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு, சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும், விபத்துசம்பந்தமாகவும், பட்டா, சிட்டா மற்றும் சிவில், கிரிமினல் சம்பந்தமாகவும், மாணவர்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும், செல் போன் அதிகம் பார்க்ககூடாது என்றும் போதைபொருள், போக்ஸோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி சார்பு நீதிபதி சாமுண்டிஸ்வரி பிரபா பேசினார்கள். விழாவில் நவ இந்தியா பள்ளி தாளாளர் sa ராஜு வரவேற்பளித்து, வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவ படுத்தினார்கள், விழாவில் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியை வட்ட சட்ட பணிகள் குழு அலுவலர்கள் கணேசமூர்த்தி, மாதாயீ, ஜெயபிரதா ஏற்பாடு செய்திருந்தனார்.
Next Story




