ராமநாதபுரம் கச்சத்தீவை மீட்டெடுக்க மீனவர்கள் போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததைப் போல் தமிழக மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் தீர்மானம்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது போல் மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமேஸ்வரத்தில் கச்சத்தீவு மீட்பு மாநாடு விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இணைந்து நடத்தினர். தமிழகத்தின் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டம் மீனவர்கள் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு பின்பு கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை நடைபெற்று வருவதால் மீன்பிடித் தொழிலை விட்டு மீனவர்கள் மாற்று தொழில் தேடி செல்வதால் மீன்பிடி தொழில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை இலங்கையில் இருந்து மீட்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி அதாவது இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து உடனடியாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்கங்கள் மற்றும் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் இணைந்து ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் கச்சத்தீவு மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டெல்லி போராட்ட குழு தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர் பஞ்சாப் ரஜ்விந்தர் சிங் கோல்டன் முன்னிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததால் மத்திய அரசு 1960 ஆம் ஆண்டு உலக வங்கி மத்தியஸ்தம் செய்து உருவான இந்திய பாகிஸ்தான் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததைப் போல் மீனவர்களை பாதுகாத்திட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், இலங்கை வசம் உள்ள படகு மற்றும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் மற்றும் மீனவர்கள் ராமேஸ்வரம் வர்த்தகம் தெருவில் இருந்து பேரணியாக ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு வந்து பின் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
Next Story





