விரைவில் அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: அமைச்சர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செய்தியாளர் சந்திப்பில் சென்னை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என 6 உருது சரகங்கள் செயல்பட்டு வருகிறது. உருது மொழியை பாதுகாத்து இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் அரணாக திகழும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசு பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என எழுப்பிய கேள்விக்கு, "இது ஒரு நல்ல திட்டம். கேரளாவில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. சுகாதாரம், உடல் நலம் என்று வரும்போது நமது தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தியுள்ளது. அதே நேரத்தில் இந்த வாட்டர் பெல் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்தவும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும் என்றார்.
Next Story

