விளையாட்டு வீரர்களுக்கு மன்னார்குடியில் சிறப்பான வரவேற்பு

X
கர்நாடக மாநிலத்தில் கடத்த சில தினங்களுக்கு முன்னர் அகில இந்திய அளவிலான வழுதூக்கும் போட்டிகள் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர் சீனியர்,ஜூனியர், சப் ஜூனியர்,என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற வழு தூக்கும் போட்டியில் 93 கிலோ எடை பிரிவில் அகில இந்திய அளவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திலகன் தங்கப்பதக்கம் வென்ற சாதனை படைத்துள்ளார்.இதே போல் 59 கிலோ எடை பிரிவில் ஸ்குவாட் பிரிவில் பிரியதர்ஷன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.இன்று காலை மன்னார்குடிக்கு வருகை தந்த வீரர்களுக்கு ராஜகோபால சாமி கோவில் வளாகத்தில் விளையாட்டு வீரர்கள், அமெச்சூர் கபாடிகழக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன்,தொழிலதிபர் smt.கருணாநிதி நகரமன்ற உறுப்பினர் ap அசோகன், தரணி கல்வி குழும இயக்குனர் இளையராஜா, உள்ளிட்ட பலர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story

