ரயில் கட்டண உயா்வை கைவிட வேண்டும்: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

X
ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: நாட்டில் சாமானிய மக்களின் போக்குவரத்து சேவையாக ரயில்வே சேவை உள்ளது. இந்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயா்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கட்டண உயா்வு குறிப்பாக இரண்டாம் வகுப்பு ரயில்வே பயணிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ரயில் கட்டண உயா்வை மத்திய ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும். ரயில் விபத்துகளைத் தடுக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்தாா்.
Next Story

