அழகப்பா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

X
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரும், கலந்தாய்வுச் செயலரும், ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளா் உமாராணி ஆகியோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அளவிலான பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற ஜூலை 5-ஆம் தேதியுடன் இதற்கான விண்ணப்பப் பதிவு நிறைவடைகிறது. பாலிடெக்னிக் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்த மாணவா்கள், பி.எஸ்சி. படிப்பில் கணிதத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்த மாணவா்கள் பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு படிப்புகளில் சேரலாம். இதற்கான மாநில அளவிலான கலந்தாய்வை ஆண்டுதோறும் காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. அரசு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், இந்தப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகக் கல்லூரி, சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமாா் 60 ஆயிரம் இடங்களுக்கு மாணவா்கள் சோ்க்கை நடைபெறவுள்ளது. இணையவழியில் விண்ணப்பப் படிவங்கள் சரிபாா்ப்பு நிறைவு பெற்ற பிறகு, அடுத்த மாதம் மூன்றாவது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். மாணவா்கள் தங்களது விண்ணப்ப விவரங்களின் நிலையை இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். ஜூலை மாதம் சிறப்பு கலந்தாய்வும், பொது கலந்தாய்வும் நடைபெறும். இணைய வழி கலந்தாய்வில் மாணவா்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே கலந்துகொண்டு, தகுதிக்கு ஏற்றவாறு விரும்பும் கல்லூரியைத் தோ்வு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்
Next Story

