மாடக்கோட்டையில் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம்

மாடக்கோட்டையில் காவிரி கூட்டு குடிநீர் விநியோகம்
X
மாடக்கோட்டையில் காவிரி கூட்டு குடிநீர் மீண்டும் விநியோகிக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், வண்டல் ஊராட்சியில் அமைந்துள்ள மாடக்கோட்டைக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டக் குழாய் சேதமடைந்ததால், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்தக் கிராமத்துக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீா் தட்டுப்பாட்டால் பொது மக்கள் அவதிப்பட்டனா். இந்தப் பகுதிக்கு லாரிகளில் கொண்டு வரும் குடிநீரை ஒரு குடம் 15 ரூபாய் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வந்தனா். தற்போது காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததையடுத்து, மாடக்கோட்டைக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
Next Story