திருவள்ளூரில் வீர ராகவர் சாமி கோயிலில் ஆணி மாத தெப்பல் உற்சவம் நடைபெற்றது
.திருவள்ளூரில் அமைந்த அருள்மிகு ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் ஆணி அமாவாசையை முன்னிட்டு முத்தங்கி சேவையும் அதனை தொடர்ந்து ஆணிதெப்ப உற்சவமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இருதப நாசினி தெப்பக்குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பெருமாள் பூ தேவி ஸ்ரீதேவி சமேதராய் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.. அதனை தொடர்ந்து இன்றும் நாளையும் என 3நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.
Next Story






