ஊரணியில் குளித்த இளைஞர் பலி

ஊரணியில் குளித்த இளைஞர் பலி
X
ஊரணியில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
மகிபாலன்பட்டி அருகேயுள்ள கோவிலாப்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன். இவரது மகன் அருண்பாண்டியன் (30). மலேசியாவில் வேலை பாா்த்து வந்த இவா், கடந்த 24-ஆம் தேதி சொந்த ஊா் திரும்பினாா். இந்த நிலையில், தனது அக்கா குழந்தைகளுடன் அந்தக் கிராமத்தில் உள்ள கோயில் ஊருணிக்கு குளிக்கச் சென்றாா். அப்போது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினாா். அந்தப் பகுதியில் இருந்தவா்கள் இவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அருண்பாண்டியனைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே அவா் உயிரிழந்து விட்டதாதக் தெரிவித்தனா். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Next Story