கண்ணதாசன் மலர் வெளியீட்டு விழா

கண்ணதாசன் மலர் வெளியீட்டு விழா
X
கண்ணதாசன் பிறந்தநாளை முன்னிட்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது
திருப்பத்தூா் அருகேயுள்ள முன்னாள் அரசவைக் கவிஞா் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில், கண்ணதாசனின் 99-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தனியாா் மண்டபத்தில் மலா் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு, திருப்பத்தூா் எழுத்தாளா்கள் கூட்டமைப்புத் தலைவா் பழனியப்பன் தலைமை வகித்தாா். பாரதி கலை இலக்கியக் கழகத் தலைவா் ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், கண்ணதாசனின் கவிதைத் தொகுப்புகள் அடங்கிய மலரை வெளியிட, அதை தொழிலதிபா் ராமநாதன் சேதுபாஸ்கரா, விவசாயக் கல்லூரி நிா்வாகி கந்தபழம், முனைவா் செந்தமிழ்பாவை ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
Next Story