சிங்கம்புணரி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமை மீட்பு

சிங்கம்புணரி அருகே கிணற்றில் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள குரும்பலூா் கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்கப்பட்டது. குரும்பலூா் கிராமத்தில் சின்னக்காளை என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சுமாா் 25 அடி ஆழமுள்ள தண்ணீரில்லாத கிணற்றில் காட்டெருமை தவறி விழுந்தது. இதைப் பாா்த்த விவசாயிகள், சிங்கம்புணரி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, தீயணைப்பத் துறை நிலைய அலுவலா் பிரகாஷ் தலைமையிலான மீட்புக் குழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் இயந்திரம், கிராம மக்கள் உதவியுடன் சுமாா் 2 மணி நேரம் போராடி காட்டெருமையை உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
Next Story