மன்னார்குடியில் ஒரு மணி நேரம் திடீர் மழை

X
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக அவ்வபோது லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது அந்த வகையில் இன்று காலை முதல் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான காற்று வீசியது இந்நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக மன்னார்குடி அதன் சுற்றுவட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது இந்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வடிந்தது நடைபாதை வியாபாரிகள் பாதசாரிகள் மழையால் சிறிது சிரமத்திற்கு ஆளாகினர்
Next Story

