திமுக பிரமுகர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டை பேரூராட்சியை சேர்ந்தவர் பிரபாகரன் இவர் தி.மு.க பேரூர் இளைஞர் அணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகின்றார். இவர் சின்னமனூரைச் சேர்ந்த சுருளி மணி என்பவரின் மனைவி ஜெயப்பிரியாவிற்கு ரூபாய் 18 லட்சத்தை கடனாக கொடுத்ததாகவும் அந்தக் கடன் தொகையை திரும்ப கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் பிரபாகரன் கடன் தொகை பெற்ற சுருளி மணியின் மனைவி ஜெயப்பிரியாவை அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் தொகையை கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் சுருளி மணி சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த அவரது மைத்துனர் முத்துராஜா மற்றும் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோருடன் சேர்ந்து வழக்கம் போல் பிரபாகரனை தொலைபேசியில் அழைத்துள்ளனர். அப்போது மார்க்கையன் கோட்டை பேரூராட்சி பேருந்து நிறுத்தம் அருகே வந்த பிரபாகரனை சுருளி மணி முத்துராஜா மற்றும் பிரபாகரன் ஆகிய மூன்று பேரும் கத்தியால் குத்தி சராமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த பிரபாகரனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சின்னமனூர் காவல் நிலைய போலீசார் கொலை குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சுருளிமணி, முத்து ராசா, மற்றும் பிரபாகரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தி.மு.கவின் முக்கிய பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
Next Story




