முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த திடீர் ஆய்வின் போது, ஆட்சித்தலைவர் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து ஆட்சியர் ஆய்வு

X
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகராட்சி பாவாலி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் ம மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் உள்ள 8 நகராட்சிப் பள்ளிகளில் 482 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, விருதுநகர் நகராட்சி பாவாலி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்பதால் மாணவர்களுக்கு ஊட்டசத்து மிகுந்த காலை உணவுகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவு என்பது குழந்தையின் மூளை மற்றும் போது ஆரோக்கியத்திற்கு ஊட்டமளிக்கிறது. எனவே, அரசு தெரிவித்துள்ள நடைமுறைகளை முறையாக பின்பற்றி, காலை உணவை ஊட்டசத்து மிக்கதாகவும் தரமானதாகவும், ருசியாகவும் வழங்குவதை தொடர்ச்சியாக உறுதி செய்ய வேண்டும் என இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினார். பின்னர், இங்கு கல்வி பயின்று வரும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், கற்பிக்கப்படும் முறை குறித்தும், கல்வி செயல்பாடுகள் குறித்தும், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் காலை உணவு சுவையாக, சத்தானதாகவும், தரமானதாகவும், குறித்த நேரத்தில் வழங்கபடுகிறதா எனவும் கேட்டறிந்து, இந்த திட்டத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என அறிவுறுத்தினார். மாணவர்களின் பெற்றோர்கள் இந்த திட்டத்தின் வாயிலாக தமது குழந்தைகள் தவறாமல் உணவு அருந்துவதாகவும், தவறாமல் பள்ளிக்கு சென்று வருவதாகவும், ஆர்வமாக கல்வி கற்பதாலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பெற்றோர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
Next Story

