மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரின் புதிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது.

X
விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரின் புதிய அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூரின் ஒரு ஆண்டிற்கான செயல்பாட்டு அறிக்கையை எம்பி மாணிக்கம் தாகூர் என்று வெளியிட்டார். மேலும் அந்த அறிக்கையில் எம்.பி யின் நாடாளுமன்றத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கான செயல்பாடுகள் மற்றும் அவர் எழுப்பிய கேள்வி களின் எண்ணிக்கை மற்றும் அவரின் வருகை பதிவேடு மற்றும் எம்.பியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்தும் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆட்சியில் நிதி வழங்கியதை விட பாஜக ஆட்சியில் தான் அதிக அளவில் நிதி வழங்கியிருக்கிறோம் என அமித்ஷா கூறிய கருத்து மாணிக்கம் தாகூர் உள்துறை அமைச்சர் அமித்ஷா எப்பவுமே நகைச்சுவையாக பேசக் கூடியவர் என்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த நிதி மற்றும் பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்ட நிதி குறித்து சதவிகிதத்தில் அமித்ஷா கூற முடியுமா என கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர் தமிழகத்திலிருந்து பெறப்படும் வருவாய் எவ்வளவு மற்றும் அந்த வருவாயில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து சதவீதத்தில் அமித்ஷா கூற முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் பாஜக ஆட்சியில் தமிழகத்தை வஞ்சிக்கிறது எனவும் கடந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சரி தற்போதைய முதல்வர் மு.க .ஸ்டாலினும் நிதிக்காக பத்து முறை மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தாமதப் படுத்துகிறது என அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த எம்பி மாணிக்கம் தாகூர் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தலுக்காக பேசுற பேச்சு எனவும் அவர் எப்போதும் பொய் மட்டும் தான் பேசுகிறார் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அனை வரும் சேர்ந்து தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள் எனவும் அதற்கு மக்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள் என்றார் மேலும் எந்த ஒரு இடத்திலும் திட்டங்களுக்காக மக்களிடம் இருந்து இடங்களையும் வாய்ப்புகளையும் பறிப்பது கிடையாது என்றார். மேலும் மத்திய அரசின் எந்தெந்த திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு தருவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் எம்பி வாஜ்பாய் மற்றும் அதற்கு முன்பாக இருந்த பிரதமர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வரும்போது ஆங்கிலத்தில் மட்டுமே உரையாற்றினார்கள் என்றார். ஆனால் தமிழகத்திற்கு வரும் போது மோடி மற்றும் அமித்ஷா இருவருமே ஹிந்தியில் தான் உரையாற்று கிறார்கள் எனவும் தமிழக மக்களுக்கு ஹிந்தி பிடிக்காது என்பதற்காகவே ஆணவத்துடன் மோடியும் அமித்ஷாவும் ஹிந்தியில் உரையாற்றுகிறார்கள் என குற்றம் சாட்டினார். மேலும் தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் போது பாஜகவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என அமித்ஷா கூறிய கருத்துக்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிமுக அமைச்சரவையில் பாஜக இடம் பெறும் என்ற ஒரு கருத்துக்காகவே தமிழகத்தில் அதிமுக தோல்விகளும் என்றார். மேலும் அதிமுக அமைச்சரவையில் பாஜகவிற்கு பங்கு என்பதை அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகளேஇதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் மேலும் 2026 தேர்தலில் பாஜக வேட்பாளர் களை தோற்கடிப்பதற்கான அனைத்து பணிகளையும் அதிமுகவினரே செய்வார்கள் என்றார்.. மேலும் பேசிய எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வளர்த்த கட்சியை பாஜகவிடம் அடகு வைக்கும் பணியை விரும்ப மாட்டார்கள் என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தகவல் எம்பி வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பகல்ஹாம் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்புவோம் என்றார். மேலும் பகல்ஹாம் தாக்குதலில் தோல்வி யாருடையது என்பது கேள்வி எழுப்புவோம் என்றார் மேலும் சீனாவில் நடைபெற்ற பாதுகாப்பு துறை அமைச்சர்களின் உச்சி மாநாட்டின் கூட்டு அறிக்கை யில் இந்தியா கையெழுத்திடாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர் எம்பி இந்தியா நல்ல நிலையை எடுத்து இருப்பதாக தெரிவித்த அவர் சர்வதேச அரங்கு களில் இந்தியாவின் நன்மைக்காக எப்போதெல்லாம் அரசு நடவடிக்கை எடுக்கிறதோ அப்போதெல்லாம் அனைத்து கட்சிகளும் அரசுடன் உடன் இருப்போம் என்றார். மேலும் மற்ற நாடுகளுக்கு நாம் தலைவணங்கி போவது என்பதோ மற்ற நாடுகளுக்காக இந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்
Next Story

