பால்வினை நோய் தடுப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

X
காங்கேயம் பஸ் நிலையத்தில் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று குறித்து ராணி கலை குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட திட்ட மேற்பார்வையாளர் சிவக்குமார் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கவிதா மற்றும் ஆய்வக நுட்புனர்கள் கருணாநிதி, மகேந்திரன், தொண்டு நிறுவன மணிகண்டன், அமுதாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சுகவாழ்வு மையம் ஆலோசகர் கருப்புசாமி ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
Next Story

