காங்கேயம் நீதிமன்றத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு

காங்கேயம் நீதிமன்றத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு
X
காங்கேயம் நீதிமன்றத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு முகாம். காங்கேயம் வட்ட சட்ட பணி குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்
காங்கேயம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வட்ட சட்டப் பணிகள் குழு சார்பாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காங்கேயம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எஸ். சந்தானகிருஷ்ணசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். காங்கேயம் உரிமையியல் நீதிபதி கே.எஸ். மாலதி, குற்றவியல் நீதித் துறை நடுவர் டி. தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு வழக்கறிஞர் வி.முருகேசன், பொன்.ரத்தினசாமி, எஸ்.செல்வகுமார், எஸ். ஜெகதீசன், தேன்மொழி, ஜெயா மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story