அமராவதி அணையில் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா விவசாயிகள் எதிர்பார்ப்பு?

X
அமராவதி அணை நிரம்பி விட்டதால் முன்கூட்டியே நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பிரதான நீர் ஆதாரம் அமராவதி அணை. 90 அடி கொள்ளளவு கொண்ட அணையில் 88 அடிக்கு தண்ணீர் உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. தற்போது அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் அமராவதி ஆற்றில் இரண்டு கரைகளையும் தொட்டு செல்கிறது. இதனால் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமராவதி அணை நிரம்பி விட்டதால் நெல் நடவிற்காக முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் திறந்து விட்டால் நிலத்தை பண்படுத்தி நெல் நாற்று இடும் பணியை தொடங்கலாம் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Next Story

