தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் 

தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் தஞ்சையில் ஆர்ப்பாட்டம் 
X
ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பனகல் கட்டிட முன்பு வெள்ளிக்கிழமையன்று, தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதற்கு மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கலியமூர்த்தி, மாவட்டப் பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக்கடைகளில் புளுடூத் மூலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட வேண்டும். அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்த வேண்டும். அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விடுமுறை நாளில் நகர்வு பணி மேற்கொள்ளக் கூடாது. பதவி உயர்வில் எழுத்தர் பணியிடம் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்ப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர்கள் ஜேம்ஸ்வாட், சாமியப்பன், மாவட்ட இணை செயலாளர்கள் ரவி, வேலாயுதம், கௌரவ செயலாளர் செல்வம் மற்றும் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றிய நிர்வாகிகள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் ‌.
Next Story