தஞ்சையில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி

X
தஞ்சை கோரிக்குளம் பனங்காட்டை சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் சத்யராஜ் (வயது 37) வியாபாரி. சம்பவத்தன்று இவர் தஞ்சை வண்டிக்கார தெரு நாகை சாலையோரம் காய்கறி வாங்கினார். பின்னர் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுக்க நடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சத்யராஜ் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சத்யராஜ் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் இறந்தார். இது பற்றிய புகாரின் பேரில் தஞ்சை நகர போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

