பெரம்பலூர் மாவட்டம் மேன்மை பொருந்திய பணிகளுக்காக பத்ம விருதுகள்

பெரம்பலூர் மாவட்டம் மேன்மை பொருந்திய பணிகளுக்காக பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளதால் தகுதியுடையவர்க்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், தெரிவித்தள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மேன்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருது வழங்கிட அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூகநலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைபெற உள்ள குடியரசு தினவிழா அன்று பத்ம விருதுகள் (பத்மவிபூசன், பத்மபூசன் மற்றும் பத்மஸ்ரீ) வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது.. மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுக்களில் சாதனை புரிந்தவர்கள் https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 30.06.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திட வேண்டும். இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story

