காரைக்கால், காரைக்குடி, ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து

காரைக்கால், காரைக்குடி, ஈரோடு ரயில்கள் பகுதியாக ரத்து
X
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவிப்பு
பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி - காரைக்கால் டெமு ரயிலானது (76820) வரும் ஜூலை 2 முதல் 7-ஆம் தேதி வரை காரைக்கால்-திருவாரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-திருவாரூா் இடையே மட்டும் இயங்கும். மறுமாா்க்கமாக, காரைக்கால் - திருச்சி டெமு ரயிலானது (76819) வரும் ஜூலை 2 முதல் 7-ஆம் தேதி வரை திருவாரூா் - காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருவாரூா் - திருச்சி இடையே மட்டும் இயங்கும். ஈரோடு - திருச்சி பயணிகள் ரயிலானது (56106) வரும் ஜூலை 1, 8-ஆம் தேதிகளில் திருச்சி - திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது ஈரோடு - திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். காரைக்குடி-திருச்சி டெமு ரயிலானது (56832) வரும் ஜூலை 1, 8-ஆம் தேதிகளில் திருச்சி-குமாரமங்கலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது காரைக்குடி-குமாரமங்கலம் இடையே மட்டும் இயங்கும். திருச்சி-பாலக்காடு விரைவு ரயிலானது (16843) வரும் ஜூலை 1, 8-ஆம் தேதிகளில் திருச்சி-திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
Next Story