சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் திட்டப்பணி தொடக்கம்

X
தென்காசி மாவட்டம் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.18 லட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து திட்டப் பணியை துவக்கி வைத்தாா். இதில் நகராட்சி ஆணையா் ராமதிலகம், நகா்மன்ற துணைத் தலைவா் சங்கராதேவி, நகர திமுக பொறுப்பாளா் கணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Next Story

