சங்கரன்கோவில் பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிருக்கு உரம் விதைக்கும் பணி நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருவேங்கடம், மலையன்குளம், சிதம்பரபுரம், நாலுவாசன்கோட்டை, அழகனேரி, கே.ஆலங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு தற்போது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக வளர்ப்பு உரம் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடுத்த 20 நாட்களுக்குள் அறுவடை செய்ய உள்ள சின்ன வெங்காயத்திற்கு விவசாயிகளை பாதிக்காத வண்ணம் உரிய விலையை நிர்ணயம் செய்ய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

