சேலம் ஏ.டி.சி. நகரில் பாலம் கட்டப்படும் இடத்தை

சேலம் ஏ.டி.சி. நகரில் பாலம் கட்டப்படும் இடத்தை
X
அருள் எம்.எல்.ஏ. ஆய்வு
சேலம் அஸ்தம்பட்டி ஏ.டி.சி. நகரில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்துள்ளது. இந்த பாலம் புதிதாக கட்டப்பட இருக்கிறது. இந்த இடத்தை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:- ஏ.டி.சி. நகர் பாலம், அருண் நகர் பாலம், கே.எம்.எஸ். கார்டன் பாலம் ஆகியவை கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த பாலங்களை சீரமைத்து தரவேண்டும் என சட்டசபையில் நான் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்று ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கி ஏ.டி.சி. நகரில் புதிய பாலம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல் பணிகளை அதிகாரிகள் தொடங்க முயன்றனர். பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன் போராட்டமும் நடத்தினேன். இதையடுத்து அருண் நகர் பாலம் ரூ.1.83 கோடியிலும், கே.எம்.எஸ். கார்டன் நகர் பாலம் ரூ.1.86 கோடியிலும் அந்த பகுதிகளில் புதிய பாலம் அமைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story