சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில்

சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில்
X
பேராசிரியர்களுக்கு புத்தாக்க கருத்தரங்கு
சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையரகம் சார்பில் திறன்வாய்ந்த பட்டயப் பொறியாளர்களை உருவாக்கும் கற்பித்தல் முறை என்ற தலைப்பில் பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்களுக்கு புத்தாக்க கருத்தரங்கு நடைபெற்றது. அரசு என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் கீதா வரவேற்றார். புத்தாக்க கருத்தரங்கை தொழில்நுட்பக் கல்வித்துறை ஆணையாளர் இன்னோசன்ட் திவ்யா தொடங்கி வைத்து பேசுகையில், தொழில்துறையில் பட்டயப் பொறியாளர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திறன் வாய்ந்த இளம் பட்டயப் பொறியாளர்களை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும் என்றார். தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் விஜயகுமார் பேசுகையில், ஆசிரியர்கள் பாரம்பரிய கற்பித்தல் முறையில் நவீன தொழில்நுட்பங்களையும் இணைத்து மாறுதல் செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்-மாணவர் இடையிலான இடைவெளி குறைந்து திறன் மேம்படும் சூழல் உருவாகும் என்றார். இதில் சேலம், கோவை, கரூர், நீலகிரி, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த பாலிடெக்னிக் பேராசிரியர்கள் 436 பேர் கலந்து கொண்டனர்.
Next Story