சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாற்றம்

சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாற்றம்
X
பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை
சேலம் சொர்ணபுரியில் தனியார் நிதி நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல லட்சம் ரூபாய் பணம் கட்டி இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் கருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், நாங்கள் கட்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டுமென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சேலம் சூரமங்கலம் உதவி போலீஸ் கமிஷனர் ராமலி ராமலட்சுமி, இன்ஸ்பெக்டர்கள் கவிதா, நவாஸ் ஆகியோர் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உதவி போலீஸ் கமிஷனர் ராமலி ராமலட்சுமி கூறுகையில், தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த பொதுமக்கள் எவ்வளவு தொகை? என்ன விவரம் குறித்து புகார் மனுவாக கொடுங்கள். அதனை பொருளாதார குற்றவியல் துறை பரிந்துரை செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். மேலும் உங்களுக்கு உரிய தொகை நீதிமன்றத்தின் வாயிலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. புகார் மனு அளித்த பின்னர் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து சமரசமான பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story