விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்
X
ஊர்வலம்
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார்.சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பி முக்கிய தெருக்கள் வழியாக சென்றனர். நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் சரஸ்வதி வேலண்ணா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழரசி, சுகாதார ஆய்வாளர்கள் பால முருகன், பிரபா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story