சேலம் வழியாக செல்லும் ஹூப்ளி- ராமேசுவரம் ரெயில் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு

சேலம் வழியாக செல்லும் ஹூப்ளி- ராமேசுவரம் ரெயில் ஜூலை மாதம் வரை நீட்டிப்பு
X
ரெயில்வே அதிகாரிகள் தகவல்
ஹூப்ளி-ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரெயில் (வண்டி எண் 07355) சனிக்கிழமை தோறும் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் வழியாக மறுநாள் காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்தை சென்றடையும். இந்த ரெயில் ஜூலை மாதம் 26-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க்கமாக ராமேசுவரம்-ஜூப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07356) ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக மறுநாள் இரவு 7.40 மணிக்கு ஹூப்ளி சென்றடைகிறது. இந்த ரெயில் ஜூலை மாதம் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story