வாலாஜா கோவில் வாசலில் முதியவர் பிணம் கண்டெடுப்பு!

வாலாஜா கோவில் வாசலில் முதியவர் பிணம் கண்டெடுப்பு!
X
கோவில் வாசலில் முதியவர் பிணம் கண்டெடுப்பு!
வாலாஜா டிரங்க் ரோட்டில் காசி விசுவநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில் வாசலில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றினர். அந்த நபரின் பெயர், ஊர் தெரியவில்லை. அவர் இதே கோவில் முன்பு பல வருடங்களாக வெளிப்புறத்தில் உட்கார்ந்து பொதுமக்கள் கொடுப்பதை யாசகம் பெற்றுக்கொண்டு இருந்துள்ளார். முதுமை காரணமாக உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story