மிஷன் ஒயிட் வேவ் திட்டம் துவக்கம் – அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

மிஷன் ஒயிட் வேவ் திட்டம் துவக்கம் – அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
X
கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில், மிஷன் ஒயிட் வேவ் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து, எம்பிஏ மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரியில், மிஷன் ஒயிட் வேவ் திட்டத்தினை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து, எம்பிஏ மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடைகள் வாங்குவதற்கான கடன்கள், செயல்படாத சங்கங்களை லாபத்துக்கு மாற்றும் திட்டங்கள், மற்றும் புதிய சங்கங்களின் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் துவக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் மூன்று மாதங்கள் பால் உற்பத்தியாளர் சங்கங்களில் பயிற்சி பெறுவார்கள் என்றும், AI என்பது மனித நுண்ணறிவின் பொருளாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஆவின் விற்பனையகங்களை கிராமப்புறங்களில் விரிவுபடுத்துவதற்கும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், விரைவில் அதன் செயல்பாடுகள் தொடங்கும் எனவும் கூறினார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் விமர்சனங்களைப் பற்றி கேட்டபோது, அரசியல் விமர்சனங்கள் நேர்மையான மனதுடன் இருக்க வேண்டும் என்றும், செய்தியாளர்கள் அத்தகைய விமர்சனங்களை ஆதரிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
Next Story