ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்!

ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம்!
X
தமிழக அரசை கண்டித்து மற்றும் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நியாய விலைக் கடை ஊழியர்கள் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசை கண்டித்து மற்றும் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள் கோவையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ரேஷன் கடைகளில் நிலவும் தொழில்நுட்ப சிக்கல்கள், புளூடூத் வழி விற்பனை நீக்கம், எடை குறைவாக வரும் ரேஷன் பொருட்கள் குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பணிச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு கடைக்கும் கூடுதல் எடையாளர் நியமிக்க வேண்டும் என்றும், தொழில்நுட்ப கோளாறுகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவர்கள் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வருக்கான கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.
Next Story