வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை சிசிடிவி காட்சி
பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகம் என்பவர் தனது நிலத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார், இன்று அதிகாலை வீட்டின் வெளியே வித்தியாசமான சத்தம் கேட்கவே வேகமாக வெளியில் வந்து பார்த்தபோது சிறுத்தை, ஒன்று விநாயகம் வீட்டின் வெளியே நின்ற நிலையில் உறங்கி கொண்டிருந்த இரு சேவல்களில் ஒரு சேவலை பதுங்கி சென்று கவ்விச்சென்றது. இது வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.வனப்பகுதிகளில் இருந்து உணவு தேடி சிறுத்தை நுழைந்துள்ளது, அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிசிடிவி காட்சி தற்போது தர்மபுரி மாவட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
Next Story




