வடமாநில வாலிபர்களை கடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள் கைது: மேலும் புகார்கள் குவிகின்றன!

X
வடமாநில வாலிபர்களை கடத்தி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் மீது மேலும் பலர் புகார் அளித்து வருகின்றனர். உக்கடம், தென்னம்பாளையம், செல்வம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முகமது அசாருதீன், நவுபால் பாஷா, செந்தில்குமார் ஆகிய மூவரும் கோவை ரயில்நிலையத்தில் ஆட்டோவில் பயணித்த வடமாநிலத் தொழிலாளர்களை, காந்திபுரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைக்காமல் ஆவாரம்பாளையம் பகுதியில் கடத்திச் சென்று பணம் பறித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து கைது செய்யப்பட் இவர்களது விசாரணையில், மேலும் பலரை இதேபோன்று கடத்தி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. கடந்த 14ஆம் தேதி வடமாநிலத்தவரை வாலாங்குளத்தில் கடத்திச் சென்று ரூ.15,000 பறித்ததாகவும் மேலும் ஒரு வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார்கள் அதிகரித்து வருவதால், காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story

