ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஈரோடு நபர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை!

ஆன்லைன் முதலீட்டு மோசடி: ஈரோடு நபர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை!
X
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டம் சங்கரபாளையத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் வந்த முதலீட்டு விளம்பரத்தை நம்பி, 4.19 லட்சம் பணத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருந்தார். பின்னர் லாபம் எதுவும் கிடைக்காததால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், பிரதீவை கைது செய்து மொபைல் போன்கள், சிம் கார்டுகள், வங்கி பாஸ்புக் மற்றும் டெபிட் கார்டுகள் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பிரதீவ் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story