கோவையில் சிறுத்தை நடமாட்டம் : பொதுமக்களில் அச்சம்!

கோவையில் சிறுத்தை நடமாட்டம் : பொதுமக்களில் அச்சம்!
X
குப்பையைபாளையம் பகுதியில், விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைக்கருகில் அமைந்துள்ள குப்பையைபாளையம் பகுதியில் நேற்று இரவு, விவசாய தோட்டத்தில் சிறுத்தை நடமாடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வால்பாறையில் சிறுமி மீது நிகழ்ந்த சிறுத்தை தாக்குதல் சம்பவம் இன்னும் மக்கள் மனதில் பதிந்து இருக்கும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதையடுத்து, வனத் துறையினர் அவசரமாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Next Story