காவல் நிலையத்தை ஆய்வு செய்த காவல் ஆணையர்.

மதுரையில் காவல் நிலையத்தை நேற்று காவல் ஆணையர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கீரைத்துறை காவல் நிலையத்தில் காவல் நிலைய செயல்பாடுகள், மற்றும் காவல் நிலைய பராமரிப்பு குறித்த வருடாந்திர ஆய்வை நேற்று (ஜூன் .27) மாலை காவல் ஆணையர் லோகநாதன் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். இந்த நிகழ்வில் துணை காவல் ஆணையர், உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் பலர் இருந்தனர்.
Next Story