காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப உதவி செய்த மாவட்ட ஆட்சியர்

X
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கணேசன்( 50) என்பவர் திருமங்கலத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் பாலாஜி (15) என்பவருடன் நேற்று (ஜூன் .27) காலை இருவரும் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்ற போது கிழவனேரி அருகே எதிரே வந்த வேன், இருசக்கர வாகனத்தில் மோதியது. இருவரும் பலத்த காயமடைந்து ரோட்டில் கிடந்தனர். அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அதேநேரம் அந்த வழியாக சேடப்பட்டி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய மதுரையின் புதிய கலெக்டர் பிரவீன்குமார் காரில் சென்றுள்ளார் விபத்தை கண்டதும் காரை நிறுத்தி இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டார். தன்னுடன் வந்த திட்ட அலுவலரின் காரில் ஏற்றி திருமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவமனைக்கு உடனே தகவல் தெரிவித்தார். அதன் பினனரே ஆய்வுப்பணிக்கு சென்றார். மாவட்ட ஆட்சியரின் துரித செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள்.
Next Story

