ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் பதவி ஏற்பு

ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் பதவி ஏற்பு
X
ஈரோடு மாவட்டத்தின் புதிய கலெக்டராக கந்தசாமி இன்று பொறுப்பேற்பு அதிகாரிகள் வாழ்த்து
ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கந்தசாமி இன்று பொறுப்பு ஏற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர்,வருவாய் கோட்டாட்சியர்,வட்டாட்சியர், அரசுத் துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாராம்பரிய மிக்க ஈரோடு மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு அளித்த முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் நன்றி.கொங்கு மண்டலத்தில் சிறப்பான காடு வளம் மிக்க மாவட்டம். இந்த மாவட்டத்தில் பணியாற்ற இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்று நடைபெறும் வேளாண் குறைத் தீர்ப்பு கூட்டம் முதல் பணியை தொடர விரும்புகிறேன்.இந்த மாவட்டத்தில் இரண்டு மூன்று பிரச்சனை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில் சிப்காட் பிரச்சினை தீர்வு காண கடந்த மாதத்தில் முதல்வர் பணியை தொடங்கினார். அதன்படி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.  பள்ளிகல்வி துறையில் முன்னேற்றம்,அரசு திட்டம் ஒருங்கிணைந்த செயல்படுத்துவதில் சவால் எதிர்கொண்டு செயல்படுவேன். அதே அரசு திட்ட பயனாளர்கள் உரிய முறையில் அடையாளம் கண்டு பணி செய்வேன்.சுகாதார தொடர்பாக மருத்துவ முகாமை ஒருங்கிணைந்து செயல்படுவேன் விரைவில் வரவுள்ளமழைக்காலம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் நடவடிக்கை எடுப்பேன்.தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா உட்பட மற்ற நாடுகளை விட தமிழகத்தில் தொடர்ந்து மக்களிடம் குறைகள் கேட்கப்படும் பழக்கம் உள்ளது. மக்களின் குறைகள் கோரிக்கை கேட்டு அதற்கான தீர்வு காண நடவடிக்கை எடுக்க ஏதுவாக உள்ளது.நான் ஆர்.டீ.ஓ பதவியில் இருக்கும் காலத்தில் இருந்து ஏராளமான மனுக்கள் வருகிறது. இது நிர்வாகத்தின் படிப்படியான பயிற்சி உள்ளது. பழங்குடியினர் வாழ்வாதாரம் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
Next Story