சிறுத்தை பிடிக்க மக்கள் கோரிக்கை

சிறுத்தை பிடிக்க மக்கள் கோரிக்கை
X
தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து 4 ஆடுகளை கடித்து கொண்ட சிறுத்தையால் பரபரப்பு கூண்டு வைத்து பிடிக்க மலை கிராம மக்கள் கோரிக்கை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி மற்றும் அதன் சுற்றியுள்ள மலை கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் இந்த கிராமங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. இதைப்போல் சிறுத்தை அவ்வபோது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடுவதும் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று தாளவாடி அடுத்த ஜோரே ஓசூர் மலை கிராமத்துக்குள் புகுந்தது. அங்கு விவசாயி மணி என்பவர் தான் வளர்ப்பு வந்த 4 ஆடுகளை விவசாய காலியிடத்தில் கட்டி வைத்திருந்தார். ஊருக்குள் வந்த சிறுத்தை அவரது தோட்டத்துக்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 4 ஆடுகளை கடித்துக் கொன்றது. அப்போது அங்கு வந்த மணி சிறுத்தை ஆடுகளை கடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இதுகுறித்த ஜிரகள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இது குறித்த பகுதி மக்கள் கூறும்போது,கடந்த சில நாட்களாகவே எங்கள் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் வனப்பகுதி விட்டு வெளியேறும் சிறுத்தை என்ற பகுதியில் உள்ள கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. இதனால் எங்கள் மலை கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் அந்த சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story