கல்லூரி மாணவி தற்கொலை

கல்லூரி மாணவி தற்கொலை
X
நோய் பாதிப்பு காரணமாக எலி மருந்து சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள புஞ்சை பாலத்தொழுவு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல்.இவர் தனது மூத்த சகோதரியின் குழந்தைகளான பரத் (21), காவ்யா (19) ஆகிய இருவரையும் சிறுவயதிலேயே தத்து எடுத்து வளர்த்து வந்தார்.பரத் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். காவ்யா, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். காவ்யாவுக்கு கடந்த 5 வருடங்களாக அல்சர் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 21-ம் தேதி காவ்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றார்.  22-ம் தேதி அவர் வாந்தி எடுத்ததால் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது காவ்யாவுக்கு காமாலை பாதிப்பு இருப்பதாகவும், தவிர அவர் எலி மருந்து சாப்பிட்டு இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனக்கு வயிற்று வலி அதிகமானதால் அவர் எலி மருந்து சாப்பிட்டதாகவும், அது குறித்து யாரிடம் தெரிவிக்கவில்லை என்றும் காவ்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காவ்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story