கள் விற்றவர் கைது

கள் விற்றவர் கைது
X
அரசால் தடை செய்யப்பட்ட கள்விற்றஒருவர் கைது
ஈரோடு மாவட்டம், சிறுவலூர் போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்திராபுரம், செங்காளி தோட்டம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில், அவர் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அருகில் உள்ள ஆலங்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜு (66) என்பதும் தெரிய வந்தது.இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story